32 KM பாக்கு நீரிணையை இன்று (01.03.2024) நீந்தி கடந்து உலக சாதனை நிகழ்த்தி தி/இ.கி.ச.ஶ்ரீ. கோணேஸ்வரா இந்துக்கல்லூரிக்கு பெருமை சேர்த்தார் 13 வயதான ஹரிஹரன் தன்வந்த் இலங்கையில் புதிய சாதனையை நிலைநாட்டினார்.
தன்வந்த் திருகோணமலை இந்துக் கல்லூரியின் 13 வயதான மாணவன் ஹரிகரன் தன்வந்த் தனுஸ்கோடியில் இருந்து தலைமன்னார் வரையான பாக்கு நீரினையை கடந்து சாதனை படைத்துள்ளார்.
இன்றைய தினம் (01) அதிகாலை 5.30 மணியளவில் தனுஸ்கோடியில் இருந்து தனது பயணத்தை ஆரம்பித்த தன்வந்த் மதியம் 2.00 மணியளவில் தலைமன்னாரை வந்தடைந்தார்.
தனுஸ்கோடி முதல் தலை மன்னார் வரையான பகுதியை 9மணித்தியாலம் 37நிமிடம் 54 செக்கனில் நீந்திக் கடந்து இலங்கையில் புதிய சாதனையை நிலைநாட்டியுள்ளார் தந்வந்த்.
பாக்கு நீரிணை கடற்பகுதியை இலங்கை வல்வெட்டித்துறையை சேர்ந்த நவரத்தினசாமி என்ற தமிழர் முதன் முதலாக 1954 ஆம் ஆண்டு நீந்திக் கடந்துள்ளார்.
வல்வெட்டித்துறையை சேர்ந்த நீச்சல் வீரரான குமார் ஆனந்தன் 1971 ஆம் ஆண்டு தலைமன்னாரில் இருந்து தனுஸ்கோடிக்கு நீந்திச் சென்று மீண்டும் தலைமன்னாருக்கு 51 மணி நேரத்தில் நீந்தி வந்து சாதனை படைத்துள்ளார்.
தன்வந்த் கிழக்கு மாகாணம் திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.