நுவரெலியா டொபாஸ்(Toppass) பகுதியில் போதைப்பொருள் வைத்திருந்த பிரித்தானிய பெண் ஒருவரையும் உள்ளூர் வாசி ஒருவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
நுவரெலியா பிரதேச குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகள் அவர்கள் பயணித்த வானை சோதனையிட்ட போது சுமார் 19 கிராம் குஸ் கஞ்சா மற்றும் 03 கிராம் ஹஷ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
உள்ளூர் நபர் வானின் சாரதி
இதன்படி, கைப்பற்றப்பட்ட போதைப்பொருளுடன் 35 வயதுடைய பிரித்தானிய பெண் ஒருவரும் நுவரெலியா பிரதேசத்தை சேர்ந்த 28 வயதுடைய ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
