புதிய அரசியல் யாப்பு ஒன்றை உருவாக்குவதன் மூலமே இலங்கையில் நிலையான சமாதானத்தை உருவாக்க முடியுமென முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வென்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,
“நாட்டில் எத்தகைய அபிவிருத்தி செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டாலும், அரசியல் யாப்பு என்பது நாட்டின் முக்கிய தேவையாக உள்ளது. இதற்காகவே தமிழ் மக்கள் நீண்டகாலமாக போராடியுள்ளனர்.
புதிய அரசியல் யாப்பொன்று உருவாக்கப்பட்டு அதன் மூலம் தமிழ் மக்களினதும், முஸ்லிம் மக்களினதும், ஏனைய இனங்களினதும் உரிமைகளும் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
இதற்காக நாட்டின் அனைத்து தரப்பினரும் இணைந்து செயற்பட வேண்டும்” என கூறினார்.