அனுராதபுரத்தில் திருமண ஒரு மாத காலத்திற்குள் கணவனுக்கு எதிராக மனைவி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தம்புத்தேகம பிரதேசத்தில் ஒரு வருட காதலின் பின்னர் திருமண பந்தத்தில் இருவரும் இணைந்துள்ளனர். திருமணத்தின் பின்னர் இளைஞன், மனைவியை தனது வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார்.
எனினும் திருமணத்தின் பின்னர் எந்தவொரு தொழிலுக்கும் செல்லாமல் கணவன் வீட்டில் இருந்துள்ளார்.
எவ்வித வருமானமும் அந்த குடும்பத்திற்கு கிடைக்கவில்லை. திருமணத்தின் முன்னர் தொழில் செய்த இளைஞன், அதன் ஊடாக கிடைத்த வருமானத்தில் திருமணத்தை செய்துள்ளார். மணமகளுக்கு மோதிரமும் அணிவித்துள்ளார்.
எப்படியிருப்பினும், தொழில் இல்லாத இந்த இளைஞன் திருமணத்திற்கு அடுத்த நாளிலேயே மனைவி அணிவித்த மோதிரத்தை அடகு வைத்துள்ளார்.
எனினும் அதனை மீட்காமையினால் இருவருக்கும் இடையில் முரண்பாடு நிலை ஏற்பட்டுள்ளது. குறித்த மோதிரத்தை இளைஞன் மீட்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளவில்லை.
கணவனின் செயற்பாடு குறித்து அதிர்ச்சி அடைந்த மனைவி, பிரிந்து விட முடிவு செய்துள்ளார். இது குறித்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடும் செய்துள்ளார்.
தான் அணிவித்த மோதிரத்தை திருமணத்திற்கு அடுத்த நாளே அடகு வைத்தமையினால் தன்னை மிகவும் அவமதித்து விட்டாதாக குறித்த பெண் கணவன் மீது முறைப்பாடு செய்துள்ளார்.