கொரோனா வைரஸ் தொற்று சமூகப் பரவலாக மாறாத போதிலும் இலங்கையில் கொரோனா ஆபத்து நீங்கிவிட்டது என கருதக்கூடாது என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
எனவே கொரோனா வைரஸ் குறித்து மக்களை தொடர்ந்தும் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
கொரோனா வைரஸ் ஆபத்து முற்றாக நீங்கிவிட்டது என கருதி மக்கள் கொரோனா வைரஸ் தொடர்பான தங்கள் எச்சரிக்கையை தளர்த்தக்கூடாது எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இலங்கையில் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் நோயாளிகள் அனைவரும் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் என தெரிவித்த இராணுவத் தளபதி சவேந்திர சில்வா, வெளிநாட்டிலிருந்து அழைத்து வரப்படுபவர்களில் சிலர் கொரோனா வைரஸினால் பாதிக்கப்படும் நிலை காணப்படுகின்ற போதிலும் வெளிநாட்டிலுள்ள இலங்கையர்களை அழைத்து வருவதை தொடர்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் என்றும் ஆபத்து நீங்கிவிட்டது என கருதக்கூடாது எனவும் இராணுவத்தளபதி தெரிவித்துள்ளார்.