இலங்கையில் ஒரே நாளில் இறுதியாக 31 கொரோனா உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் ஆய்வு பிரிவு தெரிவித்துள்ளது.
அதன்படி, இலங்கையில் கொவிட் தொற்று காரணமாக இதுவரை 923 பேர் உயிரிழந்துள்ளதாக அந்த பிரிவு குறிப்பிட்டுள்ளது.
இலங்கையில் கொரோனா தொற்று காரணமாக ஒரு இலட்சத்து 38 ஆயிரத்து 85 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களில் ஒரு இலட்சத்து 10 ஆயிரத்து 108 பேர் குணமடைந்துள்ளனர்.
அத்துடன், 27 ஆயிரத்து 54 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் ஆய்வு பிரிவு தெரிவித்துள்ளது.
இறுதியாக இலங்கையில் அவிசாவளை, நுவரெலியா, ஹொரணை, திருகோணமலை, நெலும்தெனிய, நாவுத்துடுவ, மத்துகம, பாணந்துறை, அம்பலாங்கொடை, நாகொட, மொரட்டுவை, வக்வெல்ல, கட்டுகஸ்தோட்ட, ஹிக்கடுவ, ஜின்தோட்டை, கொழும்ப -5, வெலிகம்பொல, கலென்பிந்துனுவெவ, பொல்கஸ்ஓவிட்ட, ஜா – எல, பொரலஸ்கமுவ, கந்தானை, பேராதனை, பருத்தித்துறை, பொரலந்த, வத்தளை, களனி ஆகிய பிரதேசங்களில் கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளன.