இலங்கையில் இடம்பெற்ற படகு விபத்தில் 11 பேர் பலி..
களுத்துறை கடலில் மூழ்கிய படகு – 10 சடலங்கள் மீட்பு – பலர் பலியாகி இருக்கலாம் என அச்சம்
படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்தவர்களில் அதிகமானவர்கள் உயிரிழந்திருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
களுத்துறை கட்டுகுருந்த கடற்பரப்பில் பயணித்த படகு ஒன்றே இவ்வாறு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த படகில் சுமார் 16 ற்கும் அதிகமானவர்கள் பயணித்திற்குக்க கூடும் எனவும், இதுவரையில் 10 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
மேலும் குறித்த படகில் சென்றவர்களின் விபரங்கள் இதுவரையில் வெளியாகவில்லை எனவும், மற்றவர்களை மீட்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கட்டுகுருந்த தேவாலயத்தில் நடைபெற்ற திருமண நிகழ்வொன்றில் கலந்து கொள்வதற்காக சென்றிருந்தவர்கள் எனவும், அவர்களின் படகு கட்டுகுருந்த பகுதியிலேயே கவிழ்ந்திருப்பதாக தெரியவந்துள்ளது.
காணாமல் போனவர்களை தேடும் நடவடிக்கையில் கடற்படையின் 3 டோரா படகுகளும், 3 டிங்கி படகுகளும் வான்படையினரின் பெல் 212 ஹெலிகொப்டரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
உயிருடன் மீட்கப்பட்டவர்கள் பேருவளை மற்றும் நாகொடை மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
களுத்துறை – கட்டுகுறுந்த கடற்பரப்பில் இடம்பெற்ற படகு விபத்தில் சிக்கிய 36 பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர்.
அதில் 26 பேர் பேருவளை மருத்துவமனையிலும் மேலும் 6 பேர் களுத்துறை – நாகொட மருத்துவனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் 5 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.
விபத்தில் இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.