இலங்கையிலும் ஐ.எஸ் உறுப்பினர்கள் – அமெரிக்கா அதிர்ச்சி தகவல்!
முஸ்லிம் அடிப்படைவாத பயங்கரவாத அமைப்பான ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் செயற்பாட்டு ரீதியான உறுப்பினர்கள் இலங்கையில் இருப்பதாக அமெரிக்காவின் அறிக்கை ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
சிரியாவை தளமாக கொண்டு செயற்படும் இந்த பயங்கரவாத அமைப்பில் இலங்கையர்களும் இருப்பதாகவும், பொருட்கள் மற்றும் பயங்கரவாதிகள் அங்கும் இங்கும் கொண்டு செல்ல இலங்கை பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளது.
அண்மையில் கொல்லப்பட்ட ஐ.எஸ். பயங்கரவாதிகளில் இலங்கையர்களும் அடங்குவதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
சுமார் 16 இலங்கையர்கள் அந்த அமைப்பில் இருப்பதாக அமெரிக்க புலனாய்வு பிரிவினர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளனர்.
இவ்வாறான அறிக்கையை அமெரிக்க புலனாய்வுப் பிரிவினர் வெளியிட்டுள்ள நிலையில், இது குறித்த இலங்கையின் நிலைப்பாடு வெளியிடப்படாததுடன் இதுவரை எவ்வித விசாரணைகளும் நடத்தப்படவில்லை.
இலங்கையர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பில் இருக்கும் நிலையில், இலங்கையில் பயங்கரவாத தாக்குதல் நடக்கும் என்று சந்தேகிக்க முடியாது என இது சம்பந்தமாக கருத்து வெளியிட்டிருந்த இலங்கையின் பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.