இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலையை தன்னால் மாற்றியமைக்க முடியும் என நம்பிக்கை வெளியிட்டுள்ள பிரதமர் ரணில்விக்கிரமசிங்க எனினும் 18 மாதங்களின் பின்னரே ஸ்திரதன்மை ஏற்படும் என தெரிவித்துள்ளார்.
அல்ஜசீராவிற்கான பேட்டியில் பிரதமர் இதனை தெரிவித்துள்ளார்.
2023 கடினமானதாகயிருக்கப்போகின்றது ஆனால் 2024இல் முன்னேற்றம் ஏற்பட ஆரம்பிக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தனது உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து அல்ஜசீராவிற்கு வழங்கிய பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மேமாதம் இலங்கையின் பிரதமராக ஆறாம் தடவையாக தெரிவுசெய்யப்பட்ட 73 வயது தலைவர் தான் மிகவும் வழமைக்குமாறான சூழ்நி;லையிலேயே பிரதமராக பதவியேற்றதாக தெரிவித்துள்ளார்.
நாட்டில் இரண்டு நாட்கள் அரசாங்கமே இல்லாத நிலை காணப்பட்டது,நிலைமை கையை மீறி போய்க்கொண்டிருந்தது,என தெரிவித்துள்ள அவர் முன்னாள் பிரதமர் மகிந்தராஜபக்ச பதவி விலகவேண்டிய நிலையை ஏற்படுத்திய சம்பவங்களை நினைவுகூர்ந்துள்ளார்.
நான் நிலைமை மிகவும் மோசமானதாக உள்ளது என நினைத்தேன் இது உங்கள் நாடு அதன் காரணமாக நீங்கள் வெற்றியடைவீர்களா அல்லது தோல்வியடைவீர்களா என சிந்திக்க முடியாது நீங்கள் பொறுப்பை ஏற்று வெற்றிபெறுவதற்கு முயற்சிக்கவேண்டும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேண்டுகோளின் அடிப்படையில் அவர் ஜனாதிபதியை சந்தித்திருந்தார்.
என்னால் பொருளாதார நிலைமையை மாற்ற முடியும் என்ற நம்பிக்கை எனக்குள்ளது என அவர் குறிப்பிட்டார்.
இவ்வருட ஆரம்பத்தில் அரசாங்கத்திற்கு இறக்குமதியில் ஈடுபடுவதற்கான அந்நிய செலாவணி தட்டுப்பாடு ஏற்பட்டதன் காரணமா எரிபொருள் மற்றும் உணவு மருந்துப்பொருட்களிற்கான கடும் தட்டுப்பாடு உருவானதால் 22 மில்லியன் மக்களை கொண்ட இலங்கைமுற்றாக ஸ்தம்பித நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது,
ஏப்;பிரல் மாதத்தில் இலங்கை தனது வெளிநாட்டு கடன்களை செலுத்த தவறி வங்குரோத்து நிலையை அடைந்தது, இலங்கையிடம் பயன்படுத்தக்கூடிய அந்நிய செலாவணி கையிருப்புகள் மிகவும் குறைவாக உள்ளதால் சர்வதேச சந்தையின் தேவைகளை பூர்த்தி செய்வதில் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது.
கொழும்பில் வீதிகள் முற்றாக வெறிச்சோடி காணப்படுகின்றன,இன்னமும் திறந்திருக்கின்ற பெட்ரோல் நிலையங்களிற்கு அருகில் மக்களை வரிசையாக காணக்கூடியதாக உள்ளது ஆனால் கல்விநிலையங்கள் வர்த்தகநிலையங்கள் அரசாங்க அலுவலங்கள் ஆகிய மூடப்பட்டுள்ளன,முன்னர் சுற்றுலாப்பயணிகளால் நிரம்பிவழிந்த ஹோட்டல்கள் விருந்தினர்களின் வருகை பெருமளவிற்கு குறைவடைந்துள்ளதால் தொடர்ந்தும் இயங்குவதற்கான போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.
1948 சுதந்திரத்தின் பின்னர் மோசமான நெருக்கடி
1948 சுதந்திரத்தின் பின்னர் இலங்கை சந்தித்துள்ள மிகமோசமான நெருக்கடிக்கு தீர்வை காணும் பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க 22ம் திகதி வரை பெட்ரோல் தட்டுப்பாடு காணப்படும்,அக்காலப்பகுதியிலேயே அடுத்த கப்பல் வரும் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.
நாங்கள் இந்தியாவின் கடனுதவியில் இருந்து அல்லது வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் அனுப்பும் வெளிநாட்டு நாணயத்திலிருந்து – சம்பளப்பணத்திலிருந்து எரிபொருட்களை கொள்வனவு செய்கின்றோம் என குறிப்பிட்டுள்ள பிரதமர் வெளிநாட்டில் வேலைபார்க்கும் இலங்கையர்களிடமிருந்து சிறிய எண்ணிக்கையே கிடைக்கின்றது ஆனால் சிலவேளைகளில் நாங்கள் பில்லியன் டொலர்களை அல்லது அதற்கும் சற்று அதிகமாக பெறுகின்றோம்எனவும் தெரிவித்துள்ளார்
கடன்வழங்குநர்களிடமிருந்து நாங்கள் பெற்ற நிதி ஏற்கனவே முடிவடைந்துவிட்டது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பணவீக்கம் 60 வீதத்தினால் அதிகரித்துள்ளது இதன் காரணமாக மார்ச்மாதம் முதல் இலங்கையின் நாணயப்பெறுமதி 80 வீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளதால் மக்களின் கொள்வனவு சக்தி மேலும் பாதிக்கப்பட்டுள்ளது.
கடந்தமாதம் பொருளாதாரம் முற்றாக வீழ்ச்சியடைந்துவிட்டது என பிரதமர் தெரிவித்திருந்தார்.
இது பொருளாதாரத்திற்கு பெரும் பாதிப்பு மக்களிற்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது நாங்கள் நடவடிக்கை எடுத்துள்ளோம் குறிப்பாக எரிவாயுவை கொள்வனவு செய்வதற்கான நடவடிக்கை எடுத்துள்ளோம்,இது அடுத்த சில நாட்களில் கிடைக்கும் என பிரதமர்ரணில்விக்கிரமசிங்க அல்ஜசீராவிற்கு தெரிவித்துள்ளார்.
டீசலை விநியோகிப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளோம்,பெற்றோலே பிரச்சினை இதற்கு சில நாட்கள் எடுக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எரிவாயுவை கொள்வனவு செய்வதற்கான உடன்படிக்கை சாத்தியமாகியுள்ளது இதற்கான அனேகமான நிதியை உலகவங்கியே வழங்கியுள்ளது இதன் மூலம் அடுத்த நான்கு மாதங்களிற்கான விநியோகம் உறுதிசெய்யப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பலதசாப்தகால இறக்குமதி கொள்கை- ராஜபக்ச குடும்பத்தின் ஆதிக்கத்தின் கீழ் காணப்பட்ட அரசாங்கத்தின் பிழையாக சிந்திக்கப்பட்ட உரத்தடை – பெருந்நிறுவனங்கள் செல்வந்தர்களிற்கான வரிச்சலுகை போன்றவற்றின் காரணமாக ஏற்பட்டுள்ள பெருங்குழப்பத்திற்கு தீர்வை காண்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ள இலங்கை சர்வதேச நாணயநிதியம் உலக வங்கியுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளது.
சர்வதேச நாணயநிதியத்துடன் பணியாளர் மட்ட இணக்கப்பாட்டிற்கு வந்துள்ளோம் போல தோன்றுகின்றது பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்கு இது அவசியம் போல தோன்றுகின்றது என பிரதமர் தெரிவித்தார்.
ஆகஸ்ட் மாதம் தனது அரசாங்கம் இடைக்கால வரவுசெலவுதிட்டமொன்றை சமர்ப்பிக்க எண்ணியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
அரசியல் சீர்திருத்தத்திற்கான கோரிக்கைகள்
இதேவேளை ஏப்பிரல் முதல் காலிமுகத்திடலில் முகாமுட்டுள்ள ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச பதவி விலகவேண்டும் என வேண்டுகோள் விடுத்து வருவதுடன் நாட்டை தற்போதைய நிலைக்கு கொண்டுவந்தமைக்காக ஜனாதிபதி அவரது சகோதரர் மீது குற்றம்சாட்டுகின்றனர்.
அரசியல் சீர்திருத்தத்தின் ஒரு பகுதியாக அவர்கள் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவியை நீக்கவேண்டும் என கோருகின்றனர்.
அரசியல்முறைiயில் மாற்றங்களை கோரும் ஆர்ப்பாட்டக்காரர்களின் வேண்டுகோளை தான் ஆதரிப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
ஆர்ப்பாட்டக்காரர்களிடம் பல கோரிக்கைகள் இல்லை அவர்கள் மாற்றத்தை கோருகின்றனர்,இது நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிப்பது தொடர்பானது மாத்திரமல்ல எவ்வாறு நாடாளுமன்றத்தை பலப்படுத்துவது ?எனஅவர் தெரிவித்தார்.
இளம்தலைமுறையினர் தாங்கள் தற்போதைய முறைமையிலிருந்து விலக்கப்பட்டுள்ளதாக கருதுகின்றனர் அவர்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய கருத்தினை முன்வைத்துள்ளனர் கட்சிகள் அதனை ஏற்றுக்கொள்ளவேண்டும் என பிரதமர் தெரிவித்துள்ளார்.
இளம் தலைமுறையினர் நாட்டின் அரசியலில் நுழைவதற்கான தளத்தை வழங்கவேண்டும் இதன் மூலம் அவர்களால் நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.