இலங்கையின் சுதந்திர தினமான இன்றைய நாளை கரிநாளாக பிரகடனப்படுத்தி யாழ்ப்பாணத்தில் போராட்டம் இடம்பெற்றது.
இன்று காலை 10 மணியளவில் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் அமைப்பின் ஏற்பாட்டில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
தமிழ் இனப்படுகொலைக்கான சர்வதேச நீதி விசாரணையை நடத்து, வலிந்து காணாமலாக்கப்பட்டோருக்கான நீதி, அரசியல் கைதிகளை நிபந்தனை இல்லாமல் விடுதலை செய், பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கு போன்றவற்றை வலியுறுத்தி இந்த போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.
இந்த போராட்டத்தின் போது வடக்கு, கிழக்கு தமிழரின் பூர்வீக தேசம், ஸ்ரீலங்காவின் சுதந்திரநாள் தமிழரின் கரிநாள், முள்ளிவாய்க்கால் இனப் படுகொலையை மறக்கமாட்டோம், காணாமலாக்கப்பட்டோருக்கு நீதி வழங்கு போன்ற கோசங்கள் எழுப்பப்பட்டன.
இதன்போது போராட்டக்காரர்கள் யாழ்ப்பாணம் முனியப்பர் கோவில் பகுதி வரை பேரணியாக சென்றமை குறிப்பிடத்தக்கது.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]