இலங்கையின் அரசியல் மற்றும் பொருளாதார நிலைமைகள் தொடர்பில் மிக உன்னிப்பாக அவதானித்து வருவதாக சர்வதேச நாணய நிதியம் (IMF) அறிவித்துள்ளது.
புதிதாக நியமிக்கப்படும் நிதி அமைச்சரின் அமெரிக்க விஜயத்தின் போது, எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு தமது அதிகாரிகள் தயாராகவுள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான தூதுக்குழு தலைவர் மஷாஹிரோ ஹிசாக்கி தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நிதி அமைச்சின் செயலாளர் S.R.ஆட்டிகல இன்று தமது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
தமது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி செயலாளரிடம் கையளித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, நேற்று (04) புதிய நிதி அமைச்சராக பதவியேற்ற ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி, இன்று தமது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – யூடியூப் YouTube | [email protected]