பஹாமாஸில் நடைபெற்றுவரும் இளையோர் கொமன்வெல்த் போட்டிகளில் இலங்கைக்கு இரண்டு வெள்ளிப் பதக்கங்களை வென்று கொடுத்திருக்கிறார் கேல் அபேசிங்க
இளையோர் கொமன்வெல்த் போட்டிகளில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற 100 மீற்றர் ப்ரீ ஸ்டைல் நீச்சல் பிரிவில் கேல் அபேசிங்க இரண்டாமிடத்தைப் பிடித்து இலங்கைக்கான முதல் பதக்கத்தை வென்றார்.
இந்நிலையில் நேற்று நடைபெற்ற 50 மீற்றர் ப்ரீ ஸ்டைல் நீச்சல் போட்டிப் பிரிவில் கேல் அபேசிங்க மீண்டும் ஒரு வெள்ளிப்பதக்கத்தை வென்றார்.
இதில் அவர் பந்தயத் தூரத்தை 23.38 வினாடிகள் கடந்து முடித்து இரண்டாமிடத்தைப் பெற்றார்.
இதன்மூலம் இலங்கைக்கு இரண்டு பதக்கங்களை இளையோர் கொமன்வெல்த் போட் டிகளில் வென்று கொடுத்திருக்கிறார் கேல் அபேசிங்க என்பது குறிப்பிடத்தக்கது.