இலங்கைக்கு வந்த அமெரிக்காவின் நாசகாரி – காரணம் ஏன் தெரியுமா..?
இது குறித்து ஊடகங்களில் பெரிதாக செய்திகள் வெளியாக போதிலும், இன்றைய தினம் குறித்த கப்பலின் வருகை தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.
இந்நிலையில் குறித்த கப்பலின் வருகை தொடர்பில் தந்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த கப்பலின் மாலுமி ஒருவருக்கு அவசர மருத்துவ தேவையின் காரணமாக அந்த கப்பல் இலங்கை கடற்பரப்புக்குள் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த மாதம் 29ஆம் திகதி நாசகாரியின் கட்டளை அதிகாரியான கொமடோர் ஜே.டி.கெய்னி, அமெரிக்க கடற்படையின் 15 ஆவது நாசகாரிகள் ஸ்குவாட்ரன் தலைமையகத்துக்கு இது குறித்து கோரிக்கை விடுக்கப்பட்டிருந்த போதிலும் உடனடியாக மருத்துவ வசதிகளை பெற்றுக்கொள்ள முடியாது போயுள்ளது.
இதன் போது யு.எஸ்.எஸ் ஹொப்பர் இலங்கை கரையில் இருந்து 165 கடல் மைல் தொலைவில் இருந்தத நிலையில் பாதுகாப்பு செயலாளரின் அனுமதியுடன் இலங்கை கடற்பரப்புக்குள் நுழைந்தது.
இதனையடுத்து, இலங்கை கடற்படைக்கு சொந்தமான இரண்டு விரைவு படகு மூலம் சுகவீன முற்ற மாலுமி அழைத்து வரப்பட்டு கொழும்பிலுள்ள தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, இந்த ஆண்டில் மாத்திரம் அமெரிக்கக் கடற்படையின் மூன்று போர்க்கப்பல்கள் கொழும்புத் துறைமுகத்துக்கான பயணங்களை மேற்கொண்டிருந்தன.
எனினும், குறித்த கப்பலின் விஜயம் தொடர்பிலோ, மாலுமிக்கு அவசர மருத்துவ உதவி அளிக்கப்பட்டது குறித்தோ, பாதுகாப்பு அமைச்சோ, கடற்படையோ எந்த தகவலையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.