இந்த வருடம் 4 முதல் 4.5 பில்லியன் டொலர் வரையிலான முதலீட்டை நாட்டுக்கு கொண்டு வருவதற்கான அனைத்து திட்டங்களும் தயார் செய்யப்பட்டுள்ளதாக முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம (Dilum Amunugama) தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு 1.5 பில்லியன் டொலர் முதலீட்டுக்கான இலக்கு எதிர்பார்க்கப்பட்ட போதிலும், நாடு 1.8 பில்லியன் டொலர் முதலீடுகளைப் பெற முடிந்தது என்றும் அவர் குறிப்பிட்டார்.
கண்டியில் நேற்று (16) ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும் போதே இராஜாங்க அமைச்சர் இதனை தெரிவித்தார்.
ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட பின்னர்
சர்வதேச நாணய நிதியத்துடன் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதன் பின்னர், முதலீடுகள் கணிசமான அளவில் நாட்டிற்குள் மிக அசுர வேகத்துடன் வருவதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

கடந்த போராட்டத்தால் ஏற்பட்ட எதிர்மறை விளைவுகளால், கடந்த ஆண்டு முதல் பகுதியில் எதிர்பார்த்த அளவுக்கு முதலீடுகள் வரவில்லை எனவும் ஆனால், பிற்பகுதியில் எதிர்பார்த்த அளவை விட முதலீடுகள் நாட்டிற்குள் வந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் இந்த ஆண்டு 4.5 பில்லியன் டொலர் முதலீட்டு இலக்கை நெருங்க வாய்ப்பு உள்ளது என்றும் அமைச்சர் அமுனுகம தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.