இலங்கைக்கு கனடிய வெளிவிவகார அமைச்சருடன் சென்றவர்கள் யார்? பதில் தரத் தயங்கும் கனடிய அரச கட்டமைப்பு!
இலங்கைக்குக் கனடிய வெளிவிவகார அமைச்சருடன் சென்றவர்கள் யார்? அவர் யாருடனெல்லாம் கூட்டங்களில் கலந்து கொண்டார்? எந்த எந்த இடங்களிற்குச் சென்றார்? அவருக்கும் அவரது குழுவிற்குமான பயணச் செலவு எவ்வளவு?
போன்ற கேள்விகளை எதிர்க்கட்சியான கண்சவேட்டிவ் கட்சியின் நிழல் வெளிவிவகார அமைச்சர் கௌரவ பீற்றர் கென் எழுத்துமூலமாகச் சமர்ப்பித்திருந்தார். இதற்கு 45 நாட்களிற்குள் பதில் வழங்க வேண்டிய தேவை அரசிற்கு இருந்தது.
இதற்கான பதிலில் அமைச்சர், மற்றும் அவருடன் சென்ற உதவியாளர்களின் பெயரை மாத்திரமே கனடா அரசு வழங்கியுள்ளதாக தெரிவித்த கௌரவ பீற்றர் கென் அவர்கள், இது ஒரு இழுத்தடிப்பு விவகாரமே எனவும்,
தான் இதற்கான தொடர் கேள்வியை இனிச் சமர்ப்பிக்க வேண்டுமெனவும், அதற்குப் பதில் தர மேலும் 45 நாட்களை அரச தரப்பு எடுத்துக் கொள்ளும் எனவும் தெரிவித்தார். இவ்வாறு நீடிக்கப்படும் காலத்தில் தமிழர்களிற்கான,
கனடியத் தமிழர்களிற்கு நன்மை பயக்கும் திட்டங்களைச் செய்வது போன்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்தி இந்த விவகாரத்தில் உள்ள அழுத்தத்தை பெரிய அளவிற்கு குறைக்க முயற்சிக்கலாம் என்ற ஹேஸ்யமும் எழுப்பப்பட்டது.
இதேவேளை தமிழர்களிற்கான பாராளுமன்றக் குழு என்ற பெயரில் புதியதொரு குடு தீடிரென உருவாக்கப்பட்டுள்ளது.
கௌரவ பீற்றர் கென் அவர்கள் தனக்குத் தரப்பட்டுள்ள நிறைவுறாத பதில் தொடர்பான கேள்வியை தொடரப் போவதாகத் தெரிவித்தார். 45 நாட்கள் பொறுத்திருந்து பார்ப்போமே!