இலங்கைக்கு எந்த சந்தர்ப்பத்திலும் எவ்வித உதவிகளையும் வழங்குவதற்கு தயார் என பங்களாதேஷ் வெளிவிவகார அமைச்சர் அபுல் ஹசன் மொஹமட் அலி தெரிவித்துள்ளார்.
பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனாவின் அழைப்பின் பேரில் மூன்று நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பங்களாதேஷ் விஜயம் செய்துள்ளார்.
இதன்போது, நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற பங்களாதேஷ் வெளிவிவகார அமைச்சருடனான சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
பங்களாதேஷ் எந்த சந்தர்ப்பத்திலும் இலங்கைக்கு ஆதரவாக செயற்படும் எனத் தெரிவித்த அவர், இலங்கைக்கா எந்த உதவிகளையும் வழங்குவதற்கும் தாம் தயார் என்றும் தெரிவித்தார்.
மேலும், ஜனாதிபதி மைத்திரியின் பங்களாதேஷ் விஜயம் இரு நாடுகளுக்கிடையிலான உறவை மேலும் வலுப்படுத்துவதாக அமைந்துள்ளது என்றும் கூறினார்.
ஜனாதிபதி மைத்திரியின் இம்மூன்று நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தின் போது பங்களாதேஷ் ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.