இலங்கைக்கு கிடைக்கப் பெற்றுள்ள ஆகக்கூடுதலான நிதியுதவி உலக வங்கியினால் கிடைக்கப் பெற்றுள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது. இதன் பெறுமதி 12 கோடி அமெரிக்க டொலர்கள் எனவும் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
இவ்வருடத்தில் முதன் நான்கு மாத காலப்பகுதியில் மாத்திரம் 24 கோடியே 40 இலட்சம் அமெரிக்க டொலருக்கான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளதாக நிதியமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
இதில் 17 கோடியே 40 அமெரிக்க டொலர்கள் கடன் உடன்படிக்கையும் ஊடாகவும், எஞ்சியவை நேரடி முதலீடாகவும் கிடைத்துள்ளதாகவும் அமைச்சு அறிவித்துள்ளது.