இலகுரக வாகனங்களுக்கு பின்புற கமரா பொருத்தும் திட்டம்: 2018 இல் நடைமுறைக்கு
2018 ஆம் ஆண்டிலஎதிர்வரும் 2018 ஆம் ஆண்டு மே மாதத்தில் இருந்து இலகுரக வாகனங்களுக்கு பின்புறத்தைக் காட்டும் கமராக்கள் பொருத்தப்படும் புதிய செயற்றிட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக ரான்ஸ்போர்ட் கனடா திணைக்களம் (போக்குவரத்து திணைக்களம்) தெரிவித்துள்ளது.
இந்த புதிய நடைமுறை குறித்த தகவல், கனேடிய அரச இதழில் வெளியிடப்பட்டுள்ளது.
இது தொடர்பில் அறிக்கை வெளியிட்டுள்ள ரான்ஸ்போர்ட் கனடா திணைக்களம், ‘இது பாதுகாப்பு ஒரு நடைமுறை. ஏனெனில் சிறுவர்கள், ஊனமுற்றோர், முதியோர் மற்றும் ஏனையோரை பாதுகாக்கும் வகையிலான திட்டமே இது’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை கடந்த 2004 – 2009 ஆம் ஆண்டு காலப்பகுதிக்குள் வாகன விபத்துக்களால் 27 உயிரிழந்துள்ளதுடன், 1,500 இற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.
இந்த புதிய செயற்றிட்டம் பயணிகள் கார், சிறியரக டிரக் வண்டிகள், முச்சக்கர வண்டிகள், வான்கள் மற்றும் பேரூந்துகள் ஆகிய இலகுரக வாகனங்களுக்குப் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.