இந்தியா – பங்களாதேஷ் அணிகளுக்கிடையில் நேற்று (14) நடைபெற்ற ரி.20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது.
முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 176 ஓட்டங்களைப் பெற்றது.
தனது இறுதி லீக் போட்டியில் பங்களாதேஷ் அணியை 17 ஓட்டங்களால் வெற்றிபெற்ற இந்திய அணி சுதந்திரக் கிண்ணத்திற்கான இறுதிப் போட்டியில் விளையாடும் முதல் அணியாக தன்னை உறுதிசெய்தது.
இப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் அணி முதலில் இந்திய அணியை துடுப்பெடுத்தாடுமாறு பணித்தது.
இந்நிலையில் 177 ஓட்டங்களைப் பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பங்களாதேஷ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகளை இழந்து 159 ஓட்டங்களையே பெற்றுக் கொண்டது.
புள்ளிப்பட்டியலின் அடிப்படையில் இந்திய அணி 6 புள்ளிகளுடன் முதலாவது அணியாகவும் 3 இலங்கை அணி 2 புள்ளிகளுடன் 2 ஆவது அணியாகவும் பங்களாதேஷ் அணி 3 ஆவது அணியாகவும் உள்ளன.
இந்நிலையில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை இலங்கை மற்றும் பங்களாஷே் ஆகிய அணிகளுக்கிடையில் முக்கிய போட்டி இடம்பெறவுள்ளது.