இறுதிச்சடங்கு செய்ய பணமில்லாததால் இறந்த தனது மகனின் உடலை தாய் ஒருவர் அரசு மருத்துவமனைக்கு தானமாக அளித்த சோக சம்பவம் அரங்கேறியுள்ளது.
நோயால் மருத்துவமனையில் உயிரிழந்த மகனின் உடலை சொந்த ஊருக்கு எடுத்துச் சென்று இறுதிச் சடங்கு செய்ய பணமில்லாததால் ஜதல்பூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கே உடலினை தானமாக அளித்துள்ளார்.
மிகவும் ஏழையான தங்களுக்கு யாரும் உதவ முன்வரவில்லை என அக்குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் பிரபல செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
இறுதிச் சடங்கு செய்வதற்கோ, உடலை சொந்த ஊருக்கு வாகனத்தில் எடுத்துச் செல்வதற்கோ சிறிதும் பணமில்லாத நிலையில், மருத்துவமனையைச் சேர்ந்த ஒருவர் அளித்த ஆலோசனையின் பேரிலேயே மருத்துவமனைக்கே உடலை தானமாக அளித்துவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
உயிரிழந்த நபரின் பெயர் பாமன் என்றும், கடந்த 12ம் திகதி நடந்த சாலை விபத்தொன்றில் அவர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்ததாகவும், இந்நிலையில் சிகிச்சைப் பலனின்றி பெப்ரவரி 15ம் திகதி பாமன் உயிரிழந்துவிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.