இறுக்கமான சுகாதார வழிகாட்டல்களுடன் நாட்டை மீண்டும் திறக்க வேண்டும் என நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் வலியுறுத்தியுள்ளார்.
தனது டுவிட்டர் பக்கத்தில் இந்தக் கோரிக்கையை பதிவு செய்துள்ளார். தொடர் முடக்க நிலையை நாடு தாங்கிக் கொள்ளாது. நாட்டின் சனத்தொகையில் அரைவாசிக்கும் மேற்பட்டோருக்கு தற்போதைய முடக்கல் நிலைமையை எதிர்கொள்ள முடியாது.
சிறிய மற்றும் நடுத்தர பொருளாதாரத்தைக் கொண்ட சுமார் 45 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்களால் தொடர்ந்தும் இதனை தாங்கிக்கொள்ள முடியாது.
இறுக்கமான சுகாதார வழிகாட்டல்களை நடைமுறைப்படுத்துவதுடன் தொழில், வியாபாரம் மற்றும் ஏனைய நடவடிக்கைகளை தொடர்ச்சியாக முன்னெடுக்கும் வகையில் நாடு திறக்கப்பட வேண்டும் என நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.