இன்னும் பத்து ஆண்டுகளில் இறந்தவர்களை மீண்டும் உயிருடன் கொண்டு வருவதற்கான சாத்தியக்கூறுகள், ‘Cryogenics’ தொழில்நுட்பத்தில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் உள்ள ’Cryogenics’ எனும் கல்வி நிறுவனம், இறந்தவர்களை உயிர்ப்பிக்க வைக்க முடியும் என்ற நம்பிக்கையில், இறந்தவர்களின் உடல்களை பதப்படுத்தி வைப்பதில் உலகளவில் முன்னணியில் உள்ளது.
’Cryogenics’ அமைப்பின் தலைவர் டென்னிஸ் கோவல்ஸ்கி கூறுகையில், ‘அடுத்த 10 ஆண்டுகளுக்குள் விஞ்ஞானிகள், நாங்கள் பதப்படுத்தி வைத்துள்ள உடல்களுக்கு உயிர் கொடுக்க வாய்ப்புள்ளது.
எந்த உடல் முதலில் உயிர்பெறும் என்பது இதற்கு தேவையான அறிவியல் மருந்து எந்த அளவு வேகமாக கண்டுபிடிக்கப்படுகிறது என்பதின் அடிப்படையிலேயே அமையும்.குறிப்பாக, ஸ்டெம் செல்ஸ் டெக்னாலஜி எந்த அளவிற்கு வேகமாக வளர்கிறதோ, அந்த வேகத்தில் மீண்டும் உடல்களுக்கு உயிர் கொடுக்க முடியும்.
சி.பி.ஆர் தொழில்நுட்பம் பற்றி நூறு ஆண்டுகளுக்கு முன்னர் கூறியிருந்தால் யாரும் நம்பியிருக்க மாட்டார்கள். ஆனால், இன்று அது நடைமுறையில் உள்ளது.
அதேபோல, இன்னும் நூறு ஆண்டுகளுக்குள் கண்டிப்பாக, உடல்களுக்கு மீண்டும் முழுமையாக உயிர் கொடுக்கும் அறிவியல் வரும்’ என தெரிவித்துள்ளார்.இவரது ’Cryogenics’ அமைப்பில், சுமார் 2,000 பேர் தங்களது மரணத்திற்கு பிறகு உடலை பதப்படுத்தி வைக்குமாறு ஒப்பந்தம் செய்துள்ளனர். மேலும், ஏற்கனவே இந்த அமைப்பில் 160 உடல்கள் பதப்படுத்தி வைக்கப்பட்டுள்ளன.
’Cryogenics’ என்பது, ஒரு மனிதனின் இதயத் துடிப்பு நின்று அவன் இறந்து விட்டதாக அறிவித்த 2 நிமிடங்களுக்குள், கடுங்குளிரில் அவரின் உடலில் உள்ள ரத்தத்தை வெளியேற்றி விட்டு, அதற்கு பதிலாக வேறு ஒரு ரசாயனம் உடலில் செலுத்தப்படும்.
அதன் பின்னர், செல்கள் சேதமடையாமல் இருக்க உடலுக்குள் ஊசியின் மூலமாக மருந்து செலுத்தப்படும். மேலும், உடலானது Minus 130 டிகிரி குளிரில் நிலையில் வைக்கப்படும்.
இதன் பிறகு, நைட்ரஜன் அடைக்கப்பட்ட Container-யில் உடல், Minus 196 டிகிரி செல்சியஸ் குளிரில் வைக்கப்படும்.ஆனால், உடலில் உள்ள செல்களை புதுப்பிக்கும் தொழில்நுட்பத்தை கண்டுபிடித்தால் மட்டுமே, இறந்தவரை உயிருடன் கொண்டு வர முடியும் என்று கூறப்படுகிறது.
ஏனெனில், இதயம் மற்றும் சிறுநீரகம் ஆகியவை என்னதான் பதப்படுத்தப்பட்டாலும் பழைய நிலைக்கு கொண்டு செல்ல முடியாது என நிபுணர்கள் கூறுகின்றனர்.
எனினும், ’Cryogenics’ நிறுவனம் இந்த முறையில் இறந்தவரின் உடலை பதப்படுத்தி வைக்க, 35,000 அமெரிக்க டொலர்களை கட்டணமாக நிர்ணயித்துள்ளது.
இவ்வாறு உடலை பதப்படுத்தி வைத்தாலும், செல் என்பது ஒருமுறை சேதமடைந்து விட்டால் அதனை மீண்டும் புதுப்பிக்க முடியாது. எனவே, இறந்தவர்களுக்கு உயிர் கொடுக்க நூற்றாண்டுகள் கூட ஆகலாம் என மருத்துவ நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.