இறக்குமதி அனுமதி பத்திரம் இல்லாமல் அரிசி இறக்குமதி செய்வதற்கு அனுமதி அளித்ததன் பின்னர் நேற்று வரை இறக்குமதி செய்யப்பட்ட 85ஆயிரம் மெற்றிக் தொன் அரிசி பரிசோதனை செய்து துறைமுகத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக சுங்க ஊடக பேச்சாளரும் சுங்க மேலதி பணிப்பாளர் நாயகமுமான சீவலி அருக்கொட தெரிவித்துள்ளார்.
இறக்குமதி செய்யப்பட்ட 85ஆயிரம் மெற்றிக் தொன் அரிசியில் பச்சை அரிசி 33ஆயிரம் மெட்ரிக்தொன் மற்றும் அவித்த அரிசி 52ஆயிரம் மெட்ரிக் தொன் அடங்குகிறது. சுங்கத்துக்கு மேலும் அனுப்பப்படும் இறக்குமதி செய்யப்படும் அரிசி மிக விரைவாக விடுவிக்கப்படும்.
இந்த 85ஆயிரம் மெற்றிக் தொன் அரிசியில் அரச நிறுவனமான அரச வாணிப கூட்டுத்தாபனம் இறக்குமதி செய்த 780 மெற்றிக் தொன் அரிசியும் உள்ளடங்குகுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அரச வானிப கூட்டுத்தாபனம் மொத்தமாக 20ஆயிரத்து 800 மெட்ரிக் தொன் அரிசி இறக்குமதி செய்வதற்கு கொள்வனவு கட்டளை கோரி இருப்பதாகவும் அந்த அரிசி தொகை 5200 மெற்றிக் தொன் என்ற அடிப்படையில் நான்கு கட்டங்களாக இறக்குமதி செய்யப்படும் என கூட்டுத்தாபனத்தின் தலைவர் ரவீந்திர பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
இவ்வாறு கொள்வனவு செய்யப்படுவது நாட்டரிசியாகும். ஏப்ரல் புத்தாண்டாகும் போது அரிசி பிரச்சினை தீர்க்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.