அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், சீன அதிபர் ஜி ஜின்பிங்கை திங்களன்று அநேகமாக சந்திப்பார் என்று வெள்ளை மாளிகை வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது.
மெய்நிகர் சந்திப்பு இரு தலைவர்களுக்கு இடையிலான செப்டம்பர் மாத தொலைபேசி அழைப்பைத் தொடர்ந்து வருகிறது.
வர்த்தகம், இணைய அச்சுறுத்தல்கள், காலநிலை, தாய்வான் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான இரு நாடுகளுக்கு இடையிலான பதற்றங்களுக்கு மத்தியில் இந்த சந்திப்பு இடம்பெறுகிறது.
உலகின் இரண்டு பெரிய பொருளாதார நாடுகளுக்கு இடையில் அதிகரித்த பதற்றங்களுக்கு மத்தியில் சில ஸ்திரத்தன்மையை இந்த சந்திப்பு உருவாக்கும் என்று வொஷிங்டன் நம்புகிறது.
வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் ஜென் சாகி, திங்கள்கிழமை மாலை பைடனும், ஜி யும் வீடியோ அழைப்பில் ஈடுபடுவார்கள் என்று ஒரு அறிக்கையில் உறுதிபடுத்தியுள்ளார்.
உலகின் இரண்டு பெரிய கரியமில வாயுவை வெளியேற்றும் சீனாவும் அமெரிக்காவும் – கிளாஸ்கோவில் நடந்த ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்ற மாநாட்டில் (COP26) காலநிலை மாற்றத்தை எதிர்த்து போராட ஒத்துழைக்க ஒப்புக்கொண்டதை அடுத்து இந்த சந்திப்பு வந்துள்ளது.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]