எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக இன்று முதல் சுழற்சி முறையில் மின்வெட்டினை அமுல்படுத்தப்படுவதற்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
அதன்படி A,B,C பிரிவுகளில் உள்ள பகுதிகளில் 4 மணி நேரம் 40 நிமிடங்கள் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
ஏனைய (P,Q,R,S,T,U,V,W) பிரிவுகளில் உள்ள பகுதிகளில் 4 மணி நேரம் 30 நிமிடங்கள் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
மின்சாரம் தயாரிக்க தினமும் 4,000 மெட்ரிக் தொன் எரிபொருள் தேவைப்படுவதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
நேற்று 2,000 மெட்ரிக் தொன் எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதனால் 550 மெகாவோல்ட் மின் உற்பத்தி நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்தார்.
மின் வெட்டு குறித்த அட்டவணையை பார்வையிட இங்கே அழுத்தவும்
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]