மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் 2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடரில் 20 அணிகளை தெரிவு செய்ய ஐ,சி,சி, தீர்மானித்துள்ளது.
அதன்படி, 12 அணிகள் நேரடியாகத் தகுதிபெறும், மேலும் 8 அணிகள் தகுதிச் சுற்றுப்போட்டியின் பின்னர் தேர்ந்தெடுக்கப்படும்.
இந்த ஆண்டு அவுஸ்திரேலியாவில் நடைபெறும் இருபதுக்கு 20 உலகக் கிண்ணத்தில் முதல் எட்டு அணிகளில் போட்டியை நடத்தும் நாடுகளான மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்கா ஆகியவை அடங்கும்.
மேலும், மீதமுள்ள இரு அணிகளும் இந்த ஆண்டு நவம்பர் 14 ஆம் திகதி நடைபெறும் ஐ.சி.சி. கிரிக்கெட் உலகக் கிண்ணத்தில் விளையாடும்.
உலகக் கிண்ண இருபதுக்கு 20 தரவரிசையில் முதல் 20 இடங்களுக்குள் இருக்கும் ஏனைய இரண்டு அணிகளும் உலகக் கிண்ணத்தில் நேரடியாகப் போட்டியிடும் வாய்ப்பைப் பெற்றுள்ளன.
2024 ஆம் அண்டுக்கான உலகக் கிண்ணத் தொடருக்காக 20 அணிகள் பங்கேற்றுள்ளதால், மீதமுள்ள 8 இடங்கள் மண்டல தகுதிச்சுற்றுப் போட்டியின் மூலம் தீர்மானிக்கப்படும்.
ஆபிரிக்கா, ஆசியா மற்றும் ஐரோப்பாவில் இருந்து தலா இரண்டு அணிகளும், அமெரிக்கா மற்றும் கிழக்கு ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் இருந்து தலா ஒரு அணியும் தகுதி பெறும்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – யூடியூப் YouTube | [email protected]