தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வலிமை தொடர்ந்தும் தக்கவைக்கப்படுவதற்கு இரா.சம்பந்தனின் தலைமைக்கு பின்னர் கூட்டுத் தலைமை ஒன்றின் அவசியம் குறித்து கருத்து வெளியிடப்பட்டுள்ளது.
வடமாகாண சபையின் முன்னாள் அவை தலைவர் சி.வி.கே சிவஞானம் இதனை கூறியுள்ளார். இது தமது தனிப்பட்ட கருத்து மாத்திரமல்ல. யதார்த்தமான கருத்துமாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
உடல் நல பாதிப்பால் தொடர்ச்சியாக மருத்துவ சிகிச்சை பெற்றுவரும் அவர், மருத்துவர்களின் ஆலோசனையின் பிரகாரமே இந்த முடிவை எடுக்கக்கூடும் எனவும் அந்த தகவல்கள் தெரிவித்துள்ளன.
இது குறித்து கேட்டபோதே அவர் எமது செய்தி சேவைக்கு இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
இரா.சம்பந்தன் தற்போது நாடாளுமன்ற உறுப்பினர் நிலையில் விலகுவது குறித்து ஆராயப்படவில்லை என்றும் சி.வி.கே சிவஞானம் தெரிவித்தார்.
இதன் மூலமே கூட்டமைப்பில் உள்ள மூன்று கட்சிகளும் இணைந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்ந்தும் தமிழ் மக்களுக்கான வலிமையான பேரம் பேசும் சக்தியாக நிலைத்திருக்கமுடியும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]