இராணுவ தளங்களை பார்வையிடுவதற்கு அனுமதி தேவையில்லை: பாதுகாப்பு அமைச்சு
கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் செனட்டர்கள் இராணுவத்தளங்களை பார்வையிடுவதற்கு அனுமதி பெறவேண்டும் என்ற முன்னைய அரசின் கொள்ளையை கனேடிய லிபரல் அரசு மாற்றியமைத்துள்ளது.
இது குறித்து தகவல் வெளியிட்டுள்ள கனேடிய பாதுகாப்புதுறை அமைச்சர் ஹர்ஜித் சஜ்ஜன், இராணுவத் தளங்களுக்கான வருகை அடிப்படைத் தளபதிகள் அல்லது கட்டளைத் தளபதிகளின் சுயேட்சையான தீர்மானத்தின் அடிப்படையில் அமையும் என தெரிவித்துள்ளார்.
மேலும், நாடாளுமன்ற உறுப்பினர்கள், செனட்டர்களின் வருகை கட்டுப்பாடற்ற வகையில் அனுமதிக்கப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
கனடாவில் ஸ்டீபன் ஹாப்பர் தலைமையிலான பழமைவாத கட்சியின் ஆட்சியில், கடந்த 2014 ஆம் ஆண்டு இராணுவ தளங்களை பார்வையிடுவதற்கு அனுமதி கோரப்படவேண்டும் என்ற கொள்ளை முன்வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.