இலங்கை இராணுவம் யுத்தக் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக சாட்சி கூறிய 3 ஆயிரம் பேரின் பெயர்ப் பட்டியலை ஒருபோதும் வெளியிடாதிருக்க ஜெனீவா மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இருப்பினும், இது ஒரு பக்க நடவடிக்கை எனக் கூறப்படுகின்றது. இந்த சாட்சியாளர்களில் பலர் வன்னி யுத்தத்தை கண்ணினால் கண்டவர்கள் அல்லர் எனவும், வேறு நபர்களின் தகவல்களை வைத்து சாட்சி கூறியவர்கள் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளதாக சகோதர நாளிழ் ஒன்று குறிப்பிட்டுள்ளது.
இந்த சாட்சிகளின் உண்மை நிலை குறித்துக் கூட மனித உரிமைகள் ஆணைக்குழு இதுவரை விசாரணை நடாத்த வில்லையென கூறப்படுகின்றது. இந்த சாட்சியாளர்களில் 50 பேர் முன்னாள் புலி உறுப்பினர்கள் எனவும் அச்செய்தியில் தெரிவித்துள்ளது.