முக்கிய சுற்றுலாதளங்கள், நினைவுச் சின்னங்கள் உள்ள இடங்களில் இரவு நேர உணவகங்கள் திறக்க திட்டமிட்டுள்ளதாக மத்திய சுற்றுலாத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இரவு நேர உணவகங்கள், இரவு நேர சந்தைகளை திறக்க திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளது. நாட்டில் சுற்றுலாவை மேம்படுத்தவும், இரவு நேர சுற்றுலாவை ஊக்குவிக்கவும் சுற்றுலாத்துறை இவ்வாறு ஏற்பாடு செய்துள்ளது.