திருகோணமலை சீனக்குடா பொலிஸ் பிரிவில் அமைந்துள்ள கிளப்பன்பேர்க் கடற்படை முகாமிலிருந்து கடற்படை வீரர் ஒருவரின் சடலம் கடற்படையினரின் உதவியுடன் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக சீனக்குடா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கெக்கிராவ கல்நெவ பகுதியைச் சேர்ந்த பீ.எம். புஷ்பகுமார வயது (28) எனும் கடற்படை வீரரே இவ்வாறு சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
நேற்றிரவு முகாமிற்கு தூங்கச் சென்ற கடற்படை வீரரே இன்று காலையில் சடமாக கிடந்ததாக சீனக்குடா பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் ஸ்தலத்திற்கு விரைந்த பொலிஸார் சடலத்தை மீட்டு நீதிமன்ற அனுமதியுடன் சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலையின் பிரேத அரையில் வைக்கப்பட்டுள்ளது.
குறித்த மரணம் கொலையா அல்லது தற்கொலையா என்ற கோணத்தில் மேலதிக விசாரணைகளை சீனக்குடா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.