இரயில் நிலையக் கட்டுப்பாட்டாளர்களும் இரயில் சாரதிகளும் மேற்கொண்டுள்ள திடீரென பணிப்புறக்கணிப்பை மேற்கொண்டுள்ளதாக இரயில்வே கட்டுப்பாட்டு மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
நேற்று நள்ளிரவில் இருந்து குறித்த கணிப்புறக்கணிப்பினை மேற்கொண்டு வருவதாகவும் இதனால் பல இரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்நிலையம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
விநியோக நடவடிக்கைகளில் இரயில்வே கட்டுப்பாட்டாளர்களுக்கும் இரயில் நிலைய அதிபர்களுக்கும் இடையில் நிலவிவரும் முரண்பாடு காரணமாகவே குறித்த பணிப்புறக்கணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பணிப்புறக்கணிப்பின் காரணமாக அலுவலகத்திற்குச் செல்லும் ஊழியர்கள் உட்பட பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் குறித்த சாரதிகள் முன்னறிவிப்பின்றித் திடீரென பணிப்புறக்கணிப்பினை மேற்கொண்டுள்ளதால் பணிகள் நிமித்தம் இரயில் மூலம் பயணிக்கும் பயணிகள் நேரடியாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.