இரயில் தடம் புரண்ட விபத்தில் 53 பேர் உயிரிழப்பு: 300-க்கும் அதிகமானோர் படுகாயம்
மேற்கு ஆப்பிரிக்காவின் கேமரூன் நாட்டில் பயணிகள் ரெயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் 53 பேர் உடல் நசுங்கி உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏறப்டுத்தியுள்ளது.
குறிப்பிட்ட ரயிலானது எசெகா நகரினை அடைவதற்கு சன்று முன்பு இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இதில் ஏராளமான ரயில் பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு வெகுதூரம் துண்டிக்கப்பட்டு விழுந்தது.
இந்த கோர விபத்தில் சுமார் 53 பேர் உயிரிழந்தனர். 300-க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர். காயமடைந்தவர்களில் பலரது நிலைமை கவலைக் கிடமாக உள்ளது. இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
கேமரூன் தலைநகர் யாவுண்டே மற்றும் மற்றொரு வர்த்தக நகரமான டவுலாலா இடையே இந்த பயணிகள் ரெயில் சென்றது. ரயிலில் அதிக அளவில் மக்கள் பயணம் செய்திருந்தனர்.
கடுமையாக போக்குவரத்து இடையூறு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக கேமரூன் போக்குவரத்து துறை அமைச்சர் எட்கர் அலென் தெரிவித்தார்.
இதனையடுத்து விபத்து நடைபெற்ற இடத்திற்கு அந்நாட்டின் அமைச்சரவை குழு ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மட்டுமின்றி மீட்பு குழுவினர் துரிதகதியில் செயலபட்டு வருவதாகவும் ஒரு சில குழுக்கள் தேடுதல் வேட்டையிலும் இறங்கியுள்ளதாக அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.