நிலவும் இரத்த பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கு இரத்த தானம் செய்வதற்கு ஒன்றிணையுமாறு அமைச்சர் நாமல் ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார் .
நிலவும் கொரோனா தொற்று நிலைமைக்கு மத்தியில் நாட்டில் நிலவும் இரத்த பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கு இரத்த தானம் செய்வதற்கு இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் என்ற ரீதியில் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ நேற்று தேசிய இரத்த மையத்தில் இரத்த தானம் செய்தார்.
நாட்டில் நிலவும் கொரோனா தொற்று நிலைமைக்கு மத்தியில் இரத்த பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தேசிய இரத்த மையம் அண்மையில் அறிவித்த்து.
அதற்கமைய இரத்த பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் நோக்கில் இளைஞர் சமூகத்தினர் மற்றும் அதற்கு தகுதியுள்ளவர்களை ஊக்குவிக்கும் வகையில் கௌரவ அமைச்சர் நாமல் ராஜபக்ஷ அவர்கள் இரத்த தானம் செய்தார்.
அங்கு கருத்து தெரிவித்த அமைச்சர்,
கொரோனா தொற்று காரணமாக இலங்கையின் பல இடங்களில் இரத்த தான மையங்களை நிறுவுவதற்கு முடியாத நிலை ஏற்பட்டது. அதற்கமைய இரத்த பற்றாக்குறை நிலவுவதாக சுகாதார அமைச்சும், வைத்தியர்களும் எம்மிடம் தெரிவித்தனர்.
அதற்காக எமக்கு செய்ய கூடிய ஒரே செயல் வந்து இரத்த தானம் செய்வதாகும். நீங்கள் செய்யும் இரத்த தானத்தின் மூலம் ஒரு உயிரை காப்பாற்றும் புண்ணிய செயலுக்கு உங்களுக்கு பங்களிப்பு செய்ய முடியும்.
இச்செயலுக்கு பங்களிப்பு செய்யக்கூடிய அனைவரையும் அருகிலுள்ள நிலையத்தை தொடர்புகொண்டு நிலவும் இரத்த பற்றாக்குறையை துரிதமாக நிவர்த்தி செய்வதற்கு இரத்த தானம் செய்வதற்கு முன்வருமாறு நான் அழைப்பு விடுக்கிறேன்.
நாட்டில் பயணத்தடை நிலவுவதால் வேறு நாட்களை போன்று கிராம மட்டத்தில் இரத்த தான நிலையங்களை செயற்படுத்த முடியாமையினால் நமது நாட்டில் இரத்த பற்றாக்றை ஏற்பட்டுள்ளது.
அதற்கு பங்களிப்பு செய்யும் வகையில் நான் இன்று இரத்த தானம் செய்தேன்.
கொரோனா தொற்று காரணமாக காணப்படும் பயணத்டை மற்றும் சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றி இந்த இக்கட்டான சூழ்நிலைக்கு மத்தியில் இரத்த தானம் செய்வதற்கு பங்களிப்பு செய்து தங்களால் இயன்ற வகையில் தமது கடமைகளை நிறைவேற்றுமாறு அனைவருக்கும் அழைப்பு விடுக்கின்றேன் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
ஊடக பிரிவு
இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு