கறிவேப்பிலை இலைகளையோ அல்லது அந்த இலைகளின் பொடிகளையோ அதிகம் சாப்பிட்டு வர இரத்த சோகை நீங்கி சிவப்பு இரத்த அணுக்கள் விருத்தி உண்டாகும்.
தேவையான பொருட்கள்
கறிவேப்பிலை – 1 கப்,
மைசூர் பருப்பு – 2 டேபிள்ஸ்பூன்,
உளுத்தம் பருப்பு – 2 டேபிள்ஸ்பூன்,
வெந்தயம் – 1/2 டேபிள்ஸ்பூன்,
புளி – சிறிது,
பெருங்காயம் – 1 சிட்டிகை,
சிவப்பு மிளகாய் – 7,
உப்பு – தேவைக்கு,
எண்ணெய் – 1 டேபிள்ஸ்பூன்,
பச்சரிசி – 1 டேபிள்ஸ்பூன்.
செய்முறை
கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் மைசூர் பருப்பு, உளுத்தம் பருப்பு, வெந்தயம் சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும்.
அத்துடன் கறிவேப்பிலை, புளி, பெருங்காயம், மிளகாய், பச்சரிசி சேர்த்து வதக்கவும்.
ஆறியதும் தேவையான அளவு உப்பு சேர்த்து ஒன்றிரண்டாக அரைத்துக் கொள்ளவும்.
சூடான சாதத்தில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி, இந்தப் பொடியை தேவைக்கு சேர்த்துக் கலந்து சாப்பிடலாம்.