இரண்டு வார்த்தைகளில் இலவசம் அறிவித்துள்ள ஹிலாரி!
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், பிராதான வேட்பாளர்கள் இருவரும் தமது வெற்றிக்காக பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
ஜனநாயகக் கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிடும் ஹிலாரி கிளிண்டன் லூசியானா உள்ளிட்ட மாகாணங்களில் வெற்றிகளை தக்கவைத்துள்ளார்.
இந்நிலையில், அந்நாட்டு இளைஞர், யுவதிகளையும் கவரும் வகையிலும், தேர்தலில் வெற்றியை உறுதி செய்யவும் ”இலவசம்” என்ற ஆயுதத்தை அவர் கையில் எடுத்துள்ளார்.
அந்த வகையில் தனது உத்தியோகபூர்வ ட்விட்டர் பக்கத்தில் ”இரண்டே வார்த்தைகள்” என பதிவிட்டு, ‘இலவச வைபை’ என ஒரு பதிவையிட்டுள்ளார்.
அத்துடன், குறித்த சேவையானது, விமான நிலையங்கள், பொது இடங்கள் மற்றும் ரயில் நிலையங்களில் மக்கள் பெற முடியும் எனவும் அவர் தனது பதிவில் கூறியுள்ளார்.
ஹிலாரி கிளின்டன் அந்நாட்டு மக்களை கவரும் விதமாக, மிகுந்த தொழில்நுட்பம் சார்ந்த அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்ற நிலையில், இவ்வாறு ஒரு அறிவிப்பையும் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.