டயகம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட டயகம கிழக்குத் தோட்டம் பகுதி ஆகுரோயா ஆற்றிலிருந்து இரண்டு வயதுடைய பெண் குழந்தையின் சடலம் நேற்று மாலை மீட்கப்பட்டது.
குழந்தையின் வீட்டின் பின்புறமாக உள்ள ஆற்றிலிருந்து சடலம் மீட்கப்பட்டது எனக் கூறப்பட்டது.
சடலம் நுவரெலியா மாவட்ட மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளைப் டயகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.