மத்திய வங்கியின் ஆளுனர் இந்திரஜித் குமாரசுவாமி இரண்டு நாள் விஜயமொன்றை மேற்கொண்டு யாழ்ப்பாணம் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவர் தனது விஜயத்தின் போது பல முக்கிய கூட்டங்களில் கலந்துகொள்ளவுள்ளார். இதில் மாவட்ட செயலாளர்கள், திட்டமிடல் பணிப்பாளர்கள், கமநல – கடற்றொழில் சங்கப் பிரதிநிதிகள், கூட்டுறவுச் சங்கப் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.
இதேவேளை, வடக்கில் அனுமதிபெற்ற வங்கிகள், நிதி நிறுவனங்கள், சமுர்த்தி கிராமிய வங்கிகள் ஆகியவற்றின் பிரிதிநிதிகளுடனும் இவர் சந்திப்புக்களை மேற்கொள்ளவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.