அவுஸ்திரேலியா அகதிகள் மற்றும் குடியேற்றவாசிகளிற்கான அடிப்படை உரிமைகளை இரண்டு தசாப்காலத்திற்கும் மேல் மறுத்துவருகி;ன்றது என சுயாதீன செனெட்டர் டேவிட் பொக்கொக் தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியாவிற்கு வெளியே தடுத்துவைக்கப்பட்டுள்ள 150 அகதிகள் மற்றும் குடியேற்றவாசிகளை அவுஸ்திரேலியாவிற்குள் கொண்டுவருவதற்கான சட்டமூலம் குறித்த விவாதத்தின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
தற்போது நவ்று மற்றும் பப்புவா நியுகினியில் உள்ளவர்கள் எங்கள் கூட்டு தவறுகளின் தோல்வியால் பாதிக்கப்பட்டவர்கள் என சுயாதீன செனெட்டர் டேவிட் பொக்கொக் தெரிவித்துள்ளார்.
கிறீன்ஸ் கட்சியின் செனெட்டரினால் கொண்டுவரப்பட்ட பாதுகாப்பாக வெளியேற்றுவது குறித்த சட்டமூலம் செனெட்டில் தோற்கடிக்கப்பட்டுள்ளது.
தொழில்கட்சி எதிர்கட்சி ஒன்நேசன் ஆகிய கட்சிகள் இந்த சட்டமூலத்தை எதிர்த்துள்ளன. கிறீன்ஸ் கட்சி பொக்கொக் லிடியா தோர்ப் ஆகியோர் இந்த சட்டமூலத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.