இந்தியா – தென்னாப்பிரிக்கா இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய கேப்டன் விராட் கோலி டாஸ் வென்று பௌலிங் செய்ய தீர்மானித்துள்ளார். முதல் போட்டியில் விளையாடி 11 பேருடனேயே இந்தப் போட்டியிலும் இந்திய அணி களம் காணுகிறது.
தென்னாப்பிரிக்கா சென்றுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், 6 போட்டிகள் கொண்ட ஒரு நாள் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர்களில் விளையாடுகிறது. அண்மையில் முடிந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணி 1-2 என்ற கணக்கில் தோல்வியடைந்தது. இதையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான ஒருநாள் தொடர் தொடங்கியது. டர்பன் கிங்ஸ்மெட் மைதானத்தில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி, அசத்தல் வெற்றிபெற்றுள்ள நிலையில், இந்தப் போட்டியிலும் தனது ஆதிக்கத்தை தொடர விரும்பும். தென்னாப்பிரிக்கா அதன் சொந்த ஊரில் விளையாடுவதால், கண்டிப்பாக கம்-பேக் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டாவது ஒருநாள் போட்டி, செஞ்சூரியனில் இருக்கும் சூப்பர் ஸ்போர்ட் பார்க்கில் நடக்கிறது.