இரண்டாம் உலக யுத்த கப்பல் கொழும்பு துறைமுகத்தில்..!!
கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ள குறித்த வரலாற்று கப்பலை துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சர் அர்ஜூன ரணதுங்க பார்வையிட்டுள்ளார்.
மேலும் குறித்த கப்பலானது இலங்கைக்கு வருகைத்தந்ததன் மூலமாக இரு நாடுகளிற்கிடையேயான உறவினை பலப்படுத்த முடியுமென துறைமுகங்கள் மற்றும்கப்பற்றுறை அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
1927 ம் ஆண்டு நோர்வே நாட்டின் கப்பற் முனையத்தில் கட்டப்பட்ட இக்கப்பலானது தன்னுடைய முதலாவது கன்னிப்பயணத்தை ஒஸ்லோ நகரிற்கு மேற்கொண்டுள்ளது.
அன்றிலிருந்து 90 ஆண்டுகளிற்கு தொடர்ச்சியாக இப்பாய்மர கப்பல் கடற் பயணங்களை மேற்கொள்வதுடன்,
இரண்டாம் உலக போரின் பொழுது சிறைகைதிகளை தடுத்துவைப்பதற்காகவும் இக்கப்பல் பயன்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் 27 பாய்மரங்கள் கொண்டமைந்த இச்சோலன்ட் கப்பலானது 22 நாடுகளிலுள்ள 44 துறைமுகங்களிற்கு சுற்றுப்பயணங்களை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.