இரணைமடு வாய்க்காலை ஆழப்படுத்தும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். இரணைமடு குளத்தின் நீர்மட்டம் குறைவடைந்துள்ளமையால் சிறுபோக செய்கை பாதிக்கப்படும் அச்சத்தில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இரணைமடு விவசாய சம்மேளத்தின் கீழ் உள்ள விவசாயிகளே பிரதான வாய்க்காலை ஆழப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.