இலங்கை விமானப் படையின் விமானிகள் அடிப்படை பயிற்சிக்கு பயன்படுத்தப்படும் செஸ்னா – 150 என்ற விமானம் திருகோணமலை, நிலாவெளி கடற்கரைக்கு அருகிலுள்ள இரக்கண்டி பகுதியில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விமானம் இவ்வாறு தரையிறக்கப்பட்தாக இலங்கை விமானப் படையினர் தெரிவித்துள்ளனர்.
இன்று காலை 10.22 மணியளவில் திருகோணமலையில் உள்ள சீனா சீனா பே விமானப்படை தளத்திலிருந்து விமானம் புறப்பட்டு காலை 10.48 மணியளவில் இரக்கண்டி பகுதியில் தரையிறக்கம் செய்யப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு விமானப்படைத் தளபதி ஏயர் மார்ஷல் தர்ஷன பதிரண சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.