இரகுநாத குமாரதாஸ் மாப்பாண முதலியாரின் பூதவுடல் செம்மணி இந்து மயானத்தில் இன்று நண்பகல் 12 மணியளவில் தகனம் செய்யப்பட்டது.
நேற்று சிவபதமடைந்த இரகுநாத குமாரதாஸ் மாப்பாண முதலியாரின் பூதவுடல் நல்லூரிலுள்ள அவரது இல்லத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
இதன்போது அவருடைய உடலுக்கு பொதுமக்களும் அரசியல்வாதிகளும் முக்கியஸ்தர்களும் அஞ்சலி செலுத்திய நிலையில் இறுதி ஊர்வலம் அவரது இல்லத்தில் இருந்து ஆரம்பித்து செம்மணி இந்து மயானத்தை அடைந்தது.
வழிநெடுகிலும் பொதுமக்கள், வீதிகளில் நின்றவர்கள் அஞ்சலி செலுத்தியதுடன் மலர்தூவி மரியாதை செலுத்தினர் .
சுகாதார நடைமுறைப்படி பொதுமக்களின் பங்கேற்புடன் மிகவும் அமைதியான முறையிலே இறுதி ஊர்வலம் இடம்பெற்றது.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]