நாடாளாவிய ரீதியில் பயணத்தடை அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் வவுனியா மாவட்டத்தின் இயல்பு வாழ்க்கை முழுமையாக முடங்கியது.
கொரோனா வைரஸ் தாக்கத்தினை கட்டுப்படுத்தும் நோக்குடன் நாடாளாவிய ரீதியில் நேற்று இரவு முதல் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் வவுனியாவில் மாவட்டம் தழுவிய ரீதியில் காவல்துறையினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், அத்திய அவசிய தேவைகள் நிமித்தம் வெளியில் திரிவோரை தவிர ஏனையவர்கள் காவல்துறையினரால் திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றனர்.
அனைத்து வியாபார நிலையங்களும் மூடப்பட்டுள்ளதுடன், தனியார் மருத்துவ மனைகள் மற்றும் ஒருசில மருந்தகங்கள் திறக்கப்பட்டிருந்தது.