“இயல்பிற்கு விரோதமாக’ காணாமல் போன இப்பெண்ணை கண்டீர்களா?
கனடா-“இயல்பிற்கு விரோதமாக” காணாமல் போயுள்ள 13-வயது பெண்ணை கண்டுபிடிக்க பொலிசார் பொதுமக்களின் உதவியை நாடுகின்றனர்.ரொறொன்ரோ கிழக்கு பகுதி பாடசாலைக்கு அருகாமையில் இருந்து இப்பெண் காணாமல் போயுள்ளார்.இவளது குடும்பத்தினர் தீவிர கவலை கொண்டுள்ளனர்.
லறாயப் முக்தார், டோவ்ஸ் வீதி மற்றும் கோவர் அவெனியு பகுதியில் காலை 9மணியளவில காணாமல் போயுள்ளார்.
இவர் காலையில் பாடசாலைக்கு செல்வார். பாடசாலையில் இருந்த தந்தை வீட்டிற்கு அழைத்து செல்வார்.புதன்கிழமை பெண்ணை பாடசாலையில் காணவில்லை என பாடசாலை அதிகாரிகள் தந்தையாரிடம் தெரிவித்துள்ளனர்.
முக்தார் 5அடி உயரம் 85இறாத்தல்கள் எடைகொண்டவர், நீள கறுப்பு முடி.கடைசியாக காணப்பட்ட போது பாடசாலை சீருடை அணிந்திருந்தார். நீல சேட் நீல காற்சட்டை வெள்ளை சப்பாத்து மற்றும் கறுப்பு லெதர் ஜக்கெட் அணிந்திருந்தார்.
தகவல் தெரிந்தவர்கள் பொலிசாருடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகின்றனர்.தொடர்பு கொள்ள வேண்டிய இலக்கம் -416-808-5400அல்லது அனாமதேயமாக Crime Stoppers 416-222-TIPS (8477).