இயற்கை அனர்த்தத்தை எதிர்கொள்ள திட்டமிடப்பட்ட கட்டமைப்பு வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாக இடர் முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன் கீழ் இணையத்தளம் ஒன்று திறக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான நிகழ்வு அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா தலைமையில் நடைபெற்றது.
அனர்த்தங்களை எதிர்கொள்ள சகல மட்டத்திலும் முன் ஏற்பாடுகள் அவசியம் என்று அமைச்சர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு தெரிவித்தார். இதற்கு பௌதீக ரீதியாக சில ஏற்பாடுகள் அத்தியாவசியம் என்றும் அவர் குறிப்பிட்டார். இதற்காக திட்டமிடப்பட்ட கட்டமைப்பு ஒன்று தேசிய இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது.
எதிர் காலத்தில் ஏற்படக்கூடிய அனர்த்தங்களை முன்கூட்டியே அறிந்து அதற்கு தேவையான தகவல்களை ஒன்று சேர்த்து சேகரித்து வைக்கும் பணி இந்த இணையத்தளத்தின்மூலம் மேற்கொள்ளப்படும். இயற்கை அனர்த்தம் முன்னரான திட்டமிடலுக்காக இது பயன்படுத்தப்படும்.
இந்த நிகழ்வில் ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட பிரதிநிதி திருமதி நினா பிறன்ஸ்ரொப் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.