இயற்கையின் ஆசீர்வாதமின்றி மனிதனுக்கு எதிர்காலம் கிடையாது என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி சுற்றாடல் விருது விழா – 2018 கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று(வெள்ளிக்கிழமை) இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தனது வாழ்வை நேசிக்கின்ற, பிள்ளைகளின் எதிர்காலம் பற்றி சிந்திக்கின்ற அனைவரும் இயற்கையை பாதுகாக்க வேண்டுமென ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டுள்ளார்.
சுற்றாடலை பாதுகாப்பதற்காகவும் நாட்டின் வன அடர்த்தியை அதிகரிப்பதற்காகவும் அரசாங்கம் முன்னெடுத்துள்ள விரிவான நிகழ்ச்சித்திட்டங்கள் தொடர்பில் கருத்து தெரிவித்த ஜனாதிபதி, வாழ்நாளில் அனைத்து நல்ல தருணங்களின்போதும் மரக்கன்று ஒன்றை நாட்டுவது பிரஜை ஒருவர் மனித இனத்தின் இருப்புக்காக மேற்கொள்ளும் முக்கியமானதொரு கடமையும் பொறுப்பு எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.