அத்துடன் ஈஸ்டர் தாக்குதலின் சாபம் தான் நாடு பிரச்சினைக்கு மேல் பிரச்சினையை எதிர்கொள்ள காரணமாகும் எனத் தெரிவித்த எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் நிரோஷன் பெரேரா, இம்ரான்கான் போன்ற தலைவர் இருந்திருந்தால் ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைத்திருக்கும் என்றும் சபையில் கூறினார்.
மக்கள் பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையில் வரவு செலவு திட்டத்தில் நிவாரணம் கிடைக்கும் என்றே மக்கள் எதிர்பபார்த்திருந்தனர். ஆனால் அதற்கு மாற்றமாகவே இடம்பெற்றிருக்கின்றது.
உரம் பிரச்சினையை ஏற்படுத்தி விவசாயிகளை பாதிப்படையச்செய்திருக்கின்றது. எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் கடலில் தீப்பற்றியதால் கடற்றொழிலாளர்களுக்கு பிரச்சினையை ஏற்படுத்தி இருக்கின்றது. இவ்வாறு நாட்டின் பொருளாதாரம் பாரியளவில் பாதிக்கப்பட்டிருக்கின்றது.
வெளிநாட்டு செலாவணி 1.6பில்லியன் டொலர்களே தற்போது கையிருப்பிவ் இருக்கின்றது. இந்த பொருளாதார பிரச்சினையைில் இருந்து மீள அரசாங்கத்தின் வேலைத்திட்டம் என்ன என்பதை தெரிவிக்கவேண்டும்.
நாட்டில் ஏற்பட்டிருக்கும் டொலர் பிரச்சினைக்கு தீர்வுகாண சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாடி நடவடிக்கை எடுக்கவேண்டும் என நாங்கள் தெரிவித்தோம். ஆனால் அரசாங்கத்திடமிருந்து இதற்கு முறையான பதில் கிடைக்கவில்லை. அப்படியானால் தற்போது ஏற்பட்டிருக்கும் டொலர் பிரச்சினையை தீர்ப்பதற்கு அரசாங்கம் எடுக்க இருக்கும் நடவடிக்கை என்ன? சீனாவிடம் கடன் பெறுவதா அல்லது பங்களாதேஷிடம் கையேந்துவதா என்பதை தெரிவிக்க வேண்டும் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]