நாட்டில் இன்றைய தினமும் மின்வெட்டு அமுலாக்கப்படமாட்டாது என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
தமிழ், சிங்கள புதுவருடத்தை முன்னிட்டு கடந்த இரு தினங்களாக மின்வெட்டு அமுல்படுத்தப்படாத நிலையில், இன்றைய தினமும் மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாதென என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்திருந்தது.
இதேவேளை, நாளை சனிக்கிழமை (16) மின்வெட்டு அமுலாக்கப்படுவது குறித்து இன்று தீர்மானம் மேற்கொள்ளப்படும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
மின் உற்பத்தி நிலையங்களுக்கு தேவையான எரிபொருள் கிடைக்க பெற்றமை மற்றும் நீர்மின் உற்பத்தி நிலையங்களை அண்மித்த பகுதிகளில் பதிவாகும் மழை வீழ்ச்சி ஆகியவற்றை கருத்திற் கொண்டு தீர்மானம் மேற்கொள்ளப்படும் என இலங்கை மின்சார சபை மேலும் குறிப்பிட்டுள்ளது.